செய்திகள்

மணமகள் கோலத்தில் சிலம்பம்,சுருள்வாள் சுற்றிய பெண் – செம வைரல் வீடியோ….

Published

on

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கியமானது சிலம்பாட்டம். பலராலும் கைவிடப்பட்டலும், தற்போதும் சிறுவர், சிறுமிகள் இந்த கலையை ஆர்வமுடன் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், மணமகள் கோலத்தில் பெண் ஒருவர் சிலம்பு சுற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகர் பகுதியில் நடந்துள்ளது. அப்பெண்ணின் பெயர் நிஷா. இவர் சிலம்பம் மற்றும் சுருள்வாள் பயிற்சி பெற்றவர். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையோடு, மண்டபத்திற்கு முன் சிலம்பம் மற்றும் சுருள்வாளை அசால்ட்டாக சுழற்றி அவர் பலரையும் ஆச்சர்யபடுத்தினார். திருமண வந்த கூட்டம் அவரின் திறமையை கண்டு கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version