இந்தியா

மதுபோதையில் நடுரோட்டில் அலப்பறை – வைரலாகும் இளம்பெண் வீடியோ

Published

on

மிதமிஞ்சிய மதுபோதையில் மதுப்பிரியர்கள் நடுரோட்டில் தள்ளாடிபடி நடப்பது, வாகனங்களின் மீது மோதுவது போல் செல்வது, சைக்கிளில் இருந்து கீழே விழுவது, நடனம் ஆடுவது போன்ற அலப்பறைகளை செய்யும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் சிரிக்க வைப்பதுண்டு. ஆண்கள் இதை செய்வதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், இதை பெண்கள் அதுவும் இளம்பெண்கள் செய்தால் அது அதிர்ச்சியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் லக்னோவில் சமீபத்தில் நடந்துள்ளது.

லக்னோவில் ஹிராபேக் சோக் பகுதியில் உள்ள டிலாக் சாலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஒரு இளம் பெண் மதுபோதையில் சாலையில் படுத்து அலப்பறை செய்துள்ளார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் அங்கு செல்வதற்கு முன் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

ஆனாலும், அப்பெண்ணை சிலர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர தற்போது இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version