தமிழ்நாடு

ஓய்வுபெற உள்ள தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா?

Published

on

தமிழக அரசின் தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் உள்ளார். இவர் இந்த மாதம் ஓய்வு பெறுகின்றார். இவருடன் சேர்ந்து தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு முகமை நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், கலை மற்றும் கலாசார துறை ஆணையர் ராமலிங்கம் ஆகியோரும் இந்த மாதம் ஓய்வுபெற உள்ளனர்.

தலைமைச் செயலர் பதவி மிகவும் சக்திவாய்ந்த பதவி, முதல்வரின் கோப்புகள் உள்ளிட்ட மாநிலத்தின் மிக முக்கியமான கோப்புகளை கையாளக்கூடியவர் தலைமைச் செயலர். இந்நிலையில் தற்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுக்கு பின்னர் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது துறைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ்ஸை அடுத்த தலைமைச் செயலாராக்க விரும்புவதாக பேசப்படுகிறது. ஆனால் அந்த பதவிக்கு கவரனரின் செயலாளர் ராஜகோபால், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் போன்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரின் பெயர்கள் அடிபடுகிறது.

இந்நிலையில் தற்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending

Exit mobile version