செய்திகள்

4ஜி ஸ்மார்ட்போன் 2 விலை வெறும் ரூ.500 – ஜியோ நிறுவனம் அதிரடி சலுகை

Published

on

தற்போது எல்லோர் கையில் செல்போன் இருக்கிறது. அதிலும் 90 சதவீதத்தினர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். வாட்ஸ்-அப், வீடியோ கால், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்தையும் பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன்கள் தேவைப்படுகிறது.

அதேநேரம் ஒரு ஸ்மார்ட் போன் விலை என்பது குறைந்தது ரூ.7.500 முதல் லட்சம் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் இருந்தால்தான் ஒரு நல்ல நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில், 4ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ.500 மற்றும் ரூ.700 என 2 விலைகளில் விற்பனை செய்ய ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல், இந்த ஜியோ போன்கள் விற்பனைக்கு வரவுள்ளது. விரைவில் ப்ரீ புக்கிங் விலை மற்றும் சேல் ஆஃபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version