உலகம்

ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.80 லட்சம் போனஸ் கொடுத்த முதலாளி அம்மா.. இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்!

Published

on

உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் பெண் முதலாளி ஒருவர் தனது ஊழியர்களுக்கு ரூபாய் 80 லட்சம் போனஸ் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்று ராய் ஹில். இந்த நிறுவனத்தை ரைன் ஹார்ட் என்ற பெண் நடத்தி வருகிறார் என்பதும் இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நல்ல லாபத்துடன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 10 நபர்களுக்கு இந்திய மதிப்பில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக 80 லட்ச ரூபாய் போனஸ் வழங்கியுள்ளார் ரைன் ஹார்ட்.

கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளதால் அந்த 10 ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரூ.80 லட்சம் போனஸ் பெற்ற பணியாளர்களில் ஒருவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமின்றி மற்ற ஊழியர்களுக்கும் அவர் லட்சக்கணக்கில் போனஸை வாரி வழங்கியுள்ளார்.

இவ்வாறு பணியாளர்களுக்கு போனஸ் வாரி வழங்கியதற்கு காரணம் கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனம் 3.3 பில்லியன் லாபம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 80 லட்ச ரூபாய் போனஸ் வழங்கி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை மற்ற நிறுவனங்கள் பாடமாக எடுத்துக்கொண்டு போனஸ் வழங்க விட்டாலும் குறைந்தபட்சம் ஊழியர்களை வெளியேற்றாமல் இருக்க வேண்டும் என முன்னணி ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

Trending

Exit mobile version