உலகம்

ஃபேஷன் ஷோவில் மலைபோல் குவிக்கப்பட்ட ஆணுறைகள்.. என்ன காரணம்?

Published

on

உலகம் முழுவதும் வித்தியாசமான கான்செப்ட்களில் ஃபேஷன் ஷோக்கள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் மலைபோல் குவிக்கப்பட்டு இருந்த ஆணுறையை சுற்றி மாடல்கள் உலா வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிலன் நகரில் சுமார் 20000 ஆணுறைகள் பயன்படுத்தப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்ட இந்த நிலையில் அந்த ஆணுறை மலையை சுற்றி மாடல்கள் உலா வந்த காட்சியை பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.

2023 2024 ஆம் ஆண்டுக்கான புதிய ஆடைகளின் தொகுப்பு குறித்த ஃபேஷன் ஷோ சமீபத்தில் நடந்தது. இந்த பேஷன் ஷோவில் பாதுகாப்பான பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சுமார் 20000 ஆணுறைகள் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது. 200 வகையான ஆணுறை பெட்டிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் இந்த ஆணுறைகளை பல நாட்களாக சேகரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பான உடலுறவு குறித்த முக்கியத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பேஷன் ஷோவில் ஆணுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஒரு மலைபோல் ஆணுறையை குவிக்கப்பட்டதால் தான் இந்த பேஷன் ஷோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது என்றால் இதனை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். பாலியல் பாதுகாப்பு என்பது உலகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயம் என்றும் இது குறித்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை என்றும் ஆணுறைகள் பயன்படுத்தாத உடலுறவு காரணமாக பல பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த ஏற்பாட்டை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த பேஷன் ஷோவின் கிரியேட்டிவ் இயக்குனர் க்ளென் மார்டென்ஸ் என்பவர் கூறிய போது 2023 ஆம் ஆண்டில் வித்தியாசமான பேஷன் ஷோ நடத்த வேண்டும் என்று பல வகைகளில் யோசித்த பிறகு கிடைத்த ஐடியா தான் இந்த ஆணுறையை சுற்றி வரும் பேஷன் ஷோ என்றும் பொதுவாக பேஷன் ஷோ என்றால் விதவிதமான புதிய டிசைன் உடைகளை அணிந்து நடந்து வருவதை வழக்கமாக இருக்கும் என்றும் ஆனால் ஒரு ஆணுறை மலையை ஏற்படுத்தி அதை சுற்றி மாடல்கள் நடந்து வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்து அறிந்து கொள்ளுங்கள் என்பதை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கான்செப்டில் பேஷன் ஷோ தயார் செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஃபேஷன் ஷோ குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வித்தியாசமான முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version