சினிமா

60ம் கல்யாணம் பண்ற வயசுல.. 2வது திருமணம்.. ரசிகர்களை அதிர வைத்த ஆஷிஷ் வித்யார்த்தி!

Published

on

பகவதி, தில், கில்லி, அநேகன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராகவும் குணசித்ர நடிகராகவும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60வது வயதில் 2வது திருமணம் செய்து கொண்டு ரசிகர்களையும் திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

டெல்லியில் பிறந்த ஆஷிஷ் வித்யார்த்தி பாலிவுட்டில் சர்தார் படத்தின் மூலம் 1992ம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் ரிலீஸாக தாமதமானதால் த்ரோகால் என்ற படம் அவரது முதல் படமாக கருதப்படுகிறது. முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார் ஆஷிஷ் வித்தியார்த்தி. அதன் பிறகு தொடர்ந்து இந்தி,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தார்.

#image_title

தமிழில் அவரை பரவலாக அடையாளப்படுத்தியது தில் படம் தான். அதில் வில்லன் வெட்டு சங்கராக போலீஸ் அதிகாரியாக நடித்து சியான் விக்ரமுக்கு வில்லனாக மிரட்டி இருப்பார். பகவதி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி கில்லி படத்தில் செம காமெடியான அப்பாவாக ஆளே மாறி தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருப்பார்.

சமீபத்தில் வெளியான ராணா டகுபதியின் ராணா நாயுடு வெப்சீரிஸில் மேட்டர் காட்சிகளிலும் நடித்து இந்த வயதிலும் மனுஷன் மிரட்டுறாரே என அட போட வைத்தார். பார்த்தால், உடனடியாக 2வது திருமணத்தை செய்து ஆஃப் ஸ்க்ரீனிலும் ஷாக் கொடுத்து உள்ளார்.

#image_title

ஆஷிஷ் வித்யார்த்தி பழம்பெரும் நடிகையான சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவை முதன்முறை திருமணம் செய்துகொண்டார். சில தகராறு காரணமாக இருவருக்கும் இடையே மனச்சிக்கல் உருவானது. அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்னர் பிரிவில் முடிந்தது.

#image_title

இந்நிலையில் 60 வயதான ஆஷிஷ் வித்யார்த்தி அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை 2வதாக திருமணம் செய்துகொண்டார். குடும்ப உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ நடைபெற்ற திருமண புகைப்படங்களை இணையத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி வெளியிட்ட நிலையில், வாழ்த்துக்களும் ட்ரோல்களும் பறக்கின்றன.

 

seithichurul

Trending

Exit mobile version