தமிழ்நாடு

ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டும்தான் கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!

Published

on

கோயில்களுக்கு பிரசாதம் தயாரிக்க மற்றும் பிற சேவைகளுக்கு ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டுமே நெய் மற்றும் வெண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் திருக்கோயில்களில் கொள்முதல் செய்யப்படும் நெய் மற்றும் எண்ணெய் ஆகியவை தனியார் நிறுவனத்தில் அல்லது ஆவின் நிறுவனத்தில் இதுவரையில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்முதல் செய்யும் உரிமை அந்தந்த கோவில் அதிகாரிகளுக்கு இருந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்படும் நெய், வெண்ணெய் மற்றும் பிற சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த ஆணையின்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டுமே நெய், வெண்ணெய் ஆகியவற்றை வாங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

மேலும் பக்தர்கள் நெய் விளக்கு ஏற்ற விற்பனை செய்யப்படும் நெய்யினையும் ஆவினில் தான் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கோயில் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது.

Trending

Exit mobile version