தமிழ்நாடு

பொங்கல் பரிசுத்தொகையுடன் நெய் மற்றும் பால்பவுடர்?

Published

on

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் நெய்யும், பால்பவுடரும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருவமழை காரணமாக கால்நடைகளுக்கு தீவனம் அதிக அளவில் கிடைப்பதால் பால் உற்பத்தி அதிகாரிக்க துவங்கி உள்ளது. கடந்த நவம்பரில் 1 கோடியே 80 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி டிசம்பரில் 2 கோடியே 20 லட்சம் லிட்டாராக அதிகரித்துள்ளது. மேலும் அவினில் பால் உற்பத்தி 8 லட்சம் லிட்டர் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதிகப்படியான உற்பத்தி காரணமாக 16000 டன் பால் பவுடர் ஆவின் விற்பனை மையத்தில் தேங்கி உள்ளது.

இதனால் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பொங்கல் பரிசுத்தொகையுடன் குடும்ப அட்டைக்காரர்களுக்கு 500ml நெய் மற்றும் 1 கிலோ பால்பவுடர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதனுடன் பால் விற்பனை மையங்களில் தேங்கியுள்ள பால்பவுடர்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும்  பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பொங்கல் பரிசுத்தொகையுடன் பால்பவுடர்களை வழங்குவது மூலமாக பல குடும்பங்கள் பயன் பெறலாம். பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை நியாயமானது என பலத்தரப்பு மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version