இந்தியா

ஜனவரி முதல் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது அவ்வளவு ஈஸி கிடையாது: புதிய விதிமுறை அமல்!

Published

on

டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு அவ்வப்போது புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் தற்போது தானியங்கி முறையில் டிரைவிங் லைசென்ஸ் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாகவும் குறிப்பாக லஞ்சம் கொடுத்து சோதனை ஓட்டம் செய்யாமலேயே டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது டெல்லியில் மொத்தம் 13 தானியங்கி டிராக்குகள் இருக்கும் நிலையில் இவற்றில் ஏற்கனவே 12 டிராக்குகள் தானியங்கி டிரைவிங் டிராக்குகளாக மாறி உள்ளன என்றும் மீதமுள்ள ஒன்றும் விரைவில் தானியங்கி முறையில் இயங்கும் பாதையாக மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த டிராக்குகளில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்பும் விண்ணப்பதாரர்களின் ஓட்டும் திறனை நியாயமான முறையில் மதிப்பிடப்படும் என்றும், இதன் மூலம் ஆர்டிஓ உள்பட மனிதர்கள் சோதனை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து டிரைவிங் லைசென்ஸ் எடுப்பவர்கள் இந்த டிராக்டர்களில் விதி முறைகளை கடைபிடித்து வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும் என்றும் அவர்கள் என்னென்ன தவறுகள் செய்வார்கள் என்பதை கண்காணித்து தானியங்கி முறையில் அவர்களது தேர்ச்சி முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் முழுக்க முழுக்க முறைகேடுகளை தவிர்க்கலாம் என்றும் இதில் எந்தவிதமான முறையீடும் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தானியங்கி மூலம் டிரைவிங் லைசென்ஸ் நகரமாக டெல்லி மாறி உள்ளதை அடுத்து மற்ற நகரங்களிலும் இதே முறையை விரைவில் கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த முறையில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் தவறு செய்தால் அந்த தவறை சுட்டிக் காட்டப்பட்டு மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படும் என்றும் இதன் மூலம் சாலைகளில் முழுமை யாகடிரைவிங் தெரிந்தவர்கள் மட்டுமே வாகனத்தை ஓட்டும் நிலை ஏற்படும் என்றும் அதனால் விபத்துகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version