உலகம்

கஞ்சாவை சுவைக்க ரூ.88 லட்சம் சம்பளம்.. வித்தியாசமான ஒரு வேலைவாய்ப்பு..!

Published

on

இந்தியா உள்பாட் பல நாடுகளில் கஞ்சாவை வைத்திருந்தாலே குற்றவாளிகள் என கைது செய்யப்படும் நிலையில் ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைத்து டெஸ்ட் செய்யும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மனியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கஞ்சா உபயோகிக்கலாம் என அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகளில் கஞ்சாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனியில் ஒரு சில நிபந்தனைகளுடன் பொதுமக்கள் கஞ்சா பயன்படுத்தலாம் என்றும் அனுமதி பெற்ற மருந்து கடைகள் மற்றும் கடைகளில் மக்கள் கஞ்சாவை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஒரு நபர் 30 கிராம் வரை கஞ்சாவை பயன்படுத்த அனுமதி என்றும் ஆனால் அதே நேரத்தில் 18 வயதுக்கு குறைவானவர்கள் கஞ்சா பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் தெரிவித்திருந்தது.

அது மட்டும் இன்றி ஒருவர் தனது வீட்டில் மூன்று கஞ்சா செடிகளை வளர்க்கவும் ஜெர்மனி அரசு அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நெதர்லாந்து உள்பட ஒரு சில ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கஞ்சா பயன்படுத்த அனுமதி இருக்கும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் ஜெர்மனியும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெர்மனியில் கஞ்சா மருந்து பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று கஞ்சாவை டேஸ்ட் செய்வதற்காக கஞ்சா டெஸ்டர் ஒருவரை வேலைக்கு தேடுகிறது. உலகின் மிக போதை தரும் வேலை என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ள இந்த வேலைக்கு இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாய் வரை சம்பளம் தருவதாகவும் அறிவித்துள்ளது.

கன்னா மெடிக்கல் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் இந்த விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர். கஞ்சாவின் மணம், சுவை ஆகியவற்றை உணரும் திறமை உள்ள நபர்கள் இந்த வேலைக்கு எடுக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட்சன் என்பவர் கூறியபோது ’நாங்கள் தயாரிக்கும் கஞ்சா மருந்துகளை ஆஸ்திரியா, கனடா, போர்ச்சுக்கல், மாஸிடோனியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்கிறோம் என்றும் இந்த கஞ்சா மருந்து தரகட்டுப்பாட்டை கண்காணிக்கவே ஒருவரை வேலைக்கு எடுக்கிறோம் என்றும் தெரிவித்து இருந்தார்.

ஜெர்மனி அரசு அனுமதிக்கப்பட்ட கஞ்சாவின் அளவை சுவைத்து சரியாக தரம் பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வேலை மிகவும் எளிது என நினைத்து நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பம் செய்த நிலையில் செய்த நிலையில் இதுவரை யாருமே இந்த வேலைக்கு தகுதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

88 லட்சம் ரூபாய் சம்பளம் தரும் கஞ்சா சுவைக்கும் கஞ்சா டேஸ்டர் பணிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version