சினிமா செய்திகள்

’ஜெண்டில்மேன் 2’ இசையமைப்பாளரை அறிவித்த குஞ்சுமோன்: தங்கக்காசுகள் யார் யாருக்கு?

Published

on

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிக்காமல் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ’ஜெண்டில்மேன் 2’ என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார் என்பதும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று ’ஜெண்டில்மேன் 2’ படத்தின் இசையமைப்பாளரை சரியாக யூகித்து கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசுகள் வழங்கப்படும் என்று தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று அவர் ஜென்டில்மேன் படத்தில் இசை அமைப்பாளர் எம்எம் கீரவாணி என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர். உட்பட பல முன்னணி வெற்றி திரைப் படங்களுக்கு இசை அமைத்தவர் மரகதமணி என்பதும் அவர் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜெண்டில்மேன் 2’ படத்தில் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி என்பதை சரியாக யூகித்து கூறியவர்களுக்கு விரைவில் தங்ககாசு அளிக்கப்படும் என்றும் கேட்டு குஞ்சுமோன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

ஜென்டில்மேன் முதல் பாகத்தில் அர்ஜுன் நடித்த இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அர்ஜூன் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது வேறு முக்கிய நடிகர்கள் நடிப்பார்களா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ’ஜெண்டில்மேன் 2’ படத்தின் இயக்குனர் ஷங்கர் இல்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version