சினிமா

ஜீனியஸ் படமும் இந்த மாதமே ரிலீசாகிறது!

Published

on

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீனியஸ் படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி ரிலீசாகிறது.

பல முன்னணி நாயகர்கள் நடிக்க மறுத்த நிலையில், தயாரிப்பாளர் ரோஷன் தானே முன்வந்து இப்படத்தில் நடித்துக் கொடுத்தார் எனவும், இந்த கதைக்கு தேவையான சரியான நாயகன் இவர்தான் எனவும் இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் வாழ்வில் முக்கியமல்ல என்பதையும், படிப்பு வரவில்லை என்றால் அவர்கள் வாழ்வில் ஜெயிக்க மாட்டார்கள் என்பதையும் பெற்றோர்கள் இனி கூறக்கூடாது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தவுள்ளது இப்படம். வரும் 26ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் அற்புதமாக உள்ளன.

 

Trending

Exit mobile version