தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம்.. முடிவுகளை வெளியிட வேண்டாம்.. உயர் நீதிமன்றம்

Published

on

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம், தேர்தல் நடைமுறைகள் தொடரலாம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக நேற்று இன்றும் வேட்புமனு வாங்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் இன்று நடத்தப்பட்ட விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் தர்பாபு முக்கியமான வாதங்களை வைத்தது.

ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதங்கள் பின்வருமாறு

ஈபிஎஸ் கோரிக்கையை தேர்தல் ஆணையமே மறுத்துள்ளது.

ஜெயலலிதாவின் பதவி யாருக்கும் கிடையாது.

ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளர் என கூறிவிட்டு இப்போது தேர்தல் ஏன்?

ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது, தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதங்கள் பின்வருமாறு

சூழ்நிலைகள் மாறியதால் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன

பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான விதிகள் 2017ல் திருத்தப்பட்டது

பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டு வரப்பட்டது

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை பொதுக்குழு தேர்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டது”

“ஜூலை 11 ல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் சட்டவிரோதமானவையல்ல”

இதையடுத்து ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் மார்ச் 24ல் உத்தரவு பிறப்பிக்கப்படும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம், தேர்தல் நடைமுறைகள் தொடரலாம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று ஓபிஎஸ் தரப்பு வெடி வெடித்து கொண்டாடி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version