உலகம்

காசாவில் 3 நாள் போர் இடைநிறுத்தம்: போலியோ தடுப்பூசி வழங்க இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்!

Published

on

போரால் பாதிக்கப்பட்ட காசாவில் 6,40,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்தும் பணிக்காக, மூன்று நாள் போர் இடைநிறுத்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த இடைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும், என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இராணுவமும், பாலஸ்தீனின் ஹமாஸ் குழுவும், காசாவில் மூன்று பகுதிகளாக மூன்று நாள் இடைநிறுத்தங்களை ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், 640,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்த முடியும் என WHO மூத்த அதிகாரி கூறினார்.

இந்த தடுப்பூசி பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. இவை பகல் 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (உள்ளூர் நேரம்) நடைபெறும்.

மத்திய காசாவில் முதலில் இந்த இடைநிறுத்தம் நடைப்பெறும். அதன்பின் தெற்கு காசாவிலும், அதன் பிறகு வடக்கு காசாவிலும் இந்த தடுப்பூசி பிரச்சாரம் தொடரும். தேவையெனில், ஒவ்வொரு பகுதிக்கும் நான்காவது நாளாக இடைநிறுத்தத்தை நீட்டிக்க முடியும் என WHO அதிகாரி ரியான் கூறினார்.

முதல் தடுப்பூசி சுற்று முடிந்தவுடன், நான்கு வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி சுற்று நடைபெறும். சர்வதேச அளவில் போலியோவை தடுக்கும் நோக்கில், குறைந்தபட்சம் 90 சதவிகித பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Poovizhi

Trending

Exit mobile version