சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்திற்கு பதிலாக, கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? டுவிட்டரில் நடிகை கேள்வி

Published

on

நடிகர் சங்கம் என்று கூறுவதற்கு பதிலாக கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா என நடிகை ஒருவரே டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக மத்திய அரசு அமல் செய்ய திட்டமிட்டுள்ள புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த மசோதாவிற்கு நடிகர் நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் நடிகர் கார்த்தி தலைமையிலான குழு ஒன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தது என்பதும் இதனை அடுத்து முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அமைச்சருக்கு இது குறித்து கடிதம் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் அழுத்தம் காரணமாக மத்திய அரசு இந்த சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நடிகர்களை கூத்தாடிகள் என்று கூறினால் நடிகர்கள் பொங்கி எழுந்து அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஆனால் நடிகைகளில் ஒருவரே கூத்தாடிகள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்தான் நடிகையும் நடன இயக்குநரும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் என்பவர்

சமீபத்தில் நடிகர் கார்த்தி முதலமைச்சரை சந்தித்து விட்டு அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறினார். திமுக மற்றும் அந்த கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே ஒன்றிய அரசு என்று கூறி வரும்போது கார்த்தியும் ஒன்றிய அரசு என்று கூறுவதால் திமுகவின் ஆதரவாளராக அவர் செயல்பட்டு வருவதாக கூறி டுவிட் ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த டுவிட்டுக்கு பதில் கூறிய காயத்ரி ரகுராம் கூறியதாவது:

நடிகர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக மக்கள் அவர்களை கூத்தாடி என்று அழைத்தால் அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள்? இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றுதான். நடிகர் சங்கத்திற்கு பதிலாக, இதை நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? அவரைப் போன்ற நன்கு படித்த மனிதனுக்கு புரிதல் மிகக் குறைவு’ என்று பதிவு செய்துள்ளார்.

Trending

Exit mobile version