தமிழ்நாடு

சட்டம் நீங்கள் விரும்பியபடி அணியும் சட்டை அல்ல: சூர்யாவுக்கு தமிழ் நடிகை பதிலடி!

Published

on

மத்திய அரசின் புதிய ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா நேற்று பதிவு செய்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக, தன் குரல்வளையை நெறிப்பது அல்ல என்று சூர்யா பதிவு செய்ததை அடுத்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட வேறு சில திரை உலக பிரபலங்களும் இந்த சட்டத்திற்கு எதிராக தங்களுடைய கருத்தை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த சட்டத்திற்காக கருத்து சொல்லக் கூடிய கால அவகாசம் நேற்று முடிவடைய உள்ள நிலையில் கடைசி நாளில் சூர்யா கருத்து தெரிவித்தது ஏன்? என்ற கருத்தும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சூர்யாவின் ஒளிபரப்பு சட்ட வரைவு குறித்த கருத்துக்கு நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல. கருத்து சுதந்திரம் நமக்குத் தேவை ஆனால் நம் தேசத்துக்கும், நமது கலாச்சாரத்துக்கும், எந்த மதத்துக்கும் எதிராகச் சென்று நமது அமைதியைக் குலைக்க அதை தவறாகப் பயன்படுத்த முடியாது. உதாரணமாக, நீங்கள் மோடி ஜிக்கு எதிராக செல்வது என்ற பெயரில், நீங்கள் இந்தியாவிற்கும் மக்களுக்கும் எதிராக செல்கிறீர்கள் எல்லாவற்றுக்கும் உங்கள் பொது வாழ்க்கை மற்றும் புகழுக்காக. உங்கள் பேச்சில் நல்ல நடிப்பைத் தவிர வேறு எந்த உண்மையும் இல்லை. பஞ்ச் டயலாக் பேசுவதற்கு பதிலாக உண்மைகளுடன் பேசுங்கள்.

இது திரைப்படத் துறையை எந்த வகையில் பாதிக்கிறது? விசில் மற்றும் கைதட்டல்களுக்கு இளம் மனதை சிதைப்பது முக்கியமல்ல. தேச பாதுகாப்பு முக்கியம். தேசபக்தி முக்கியமானது. உண்மை முக்கியமானது.

seithichurul

Trending

Exit mobile version