தமிழ்நாடு

அடுத்த நான்கு ஆண்டுகளும் இதே பொய் தொடரும்: நீட் குறித்து காயத்ரி ரகுராம் டுவிட்

Published

on

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாமல் செய்யப்படும் என தேர்தலுக்கு முன் திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி உள்பட பலர் மக்களிடம் வாக்குறுதி கொடுத்தனர். இந்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் என்பவரது தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இன்று முதல் அமைச்சரிடம் அறிக்கை தர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த அறிக்கையை பொறுத்து தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா என்பது தமிழகத்தின் நடவடிக்கைகளை பொறுத்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீட் தேர்வை கொண்டு வர மாட்டோம் என வாக்குறுதி கொடுத்த திமுக, தற்போது அதை செய்யவில்லை என்றும் இதே பொய் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தொடரும் என்றும் நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

இந்த ஆண்டு நீங்கள் நீட் தேர்வை தடை செய்ய முடியல, மேலும் உங்கள் தவறான வாக்குறுதிகள் காரணமாக குழந்தைகளை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறீர்கள். A.K ராஜன் குழுவைக் கொண்டிருந்த பிறகும் இந்த ஆண்டு நீட் தடை செய்ய முடியல. எனவே அடுத்த நான்கு ஆண்டுகளும் இதே பொய் தொடரும்.

நீங்கள் எப்போது நீட் தேர்வை தடை செய்யப் போகிறீர்கள்? நீட் சிக்கலை நிர்வகிக்க, விஜய் வரி விஷயத்தை இழுத்தது. திசை திருப்ப நல்ல வழி. முதல்வர் வித்தியாசமாகச் சொல்கிறார், சுகாதார அமைச்சர் வித்தியாசமாக அறிவிக்கிறார். திமுக என்ன சொல்வது என்று குழப்பமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version