சினிமா செய்திகள்

ரஜினியை அமெரிக்காவில் சந்தித்த தமிழக பாஜக நிர்வாகியின் தாயார்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் குடும்பத்தினருடன் சென்றார் என்பதும் அங்கு அவர் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அமெரிக்காவின் ரஜினிகாந்த் இருந்தபோது அவரை பல ரசிகர்கள் மற்றும் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பலர் சந்தித்தனர் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களில் வெளியகை வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமன் தாயார் சற்று முன் அமெரிக்காவில் ரஜினிகாந்தை சந்தித்து உள்ளார். இன்று ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பவுள்ள நிலையில் காயத்ரி ரகுராம் தாயார் ரஜினியை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ரஜினிகாந்த் பாஜக ஆதரவாளர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜகவின் பிரபலம் ஒருவரின் தாயார் ரஜினியை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு பிரச்சனை ஆகுமா? பிரச்சனைக்குள்ளாக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் ரகுராம் குடும்பத்தினரும் ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக நெருக்கமான நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் என்பதும் அந்த அடிப்படையில் ரஜினிகாந்தை காயத்ரி ரகுராம் தாயார் செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version