தமிழ்நாடு

யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்க சிவனை பழிப்பதா? U2Brutus சேனலுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!

Published

on

தொடர்ந்து இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் வீடியோ போட்டு வரும் U2Brutus என்ற யூடியூப் சேனலுக்கு நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

சிவனைத் தொட்டால் அது சுய அழிவு போன்றது. முட்டாள்களின் சில லைக்குகளுக்காகவும், மோசமான கருத்துகளுக்காகவும், யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்கவும் இந்த முட்டாள் அறியாமல் சிவனை பற்றி பேசுகிறான். திமுக இதுவரை U2Brutus மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டவுளே, சிவபெருமானே முடிவு எடுக்கட்டும்.

U2brutus அந்த சேனலையும், இந்து கடவுளையும் அசிங்கப்படுத்தும் நபரை திமுக அரசு கைது செய்யப் போவதில்லை என்றால், திமுக என்றென்றும் இந்துக்களுக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது. அந்த கட்சியில் உள்ள இந்துக்கள் திமுக கட்சியுடன் தொடர்பு கொள்வதில் அர்த்தமில்லை. திமுக மதவாத மறைமுக தாக்குதல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

ஆன்மீக அரசாங்கம் வந்தால் நன்றாக இருக்கும். தமிழக மக்கள் ஆன்மீகம் கொண்டவர்கள். இப்போது தமிழ்நாட்டில் U2Brutus போன்ற அரசாங்கம் உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version