தமிழ்நாடு

ஐயோ அங்கிள்.. கட்சி வளரவே இல்லையே.. அண்ணாமலையை விட்டு விளாசிய காயத்ரி ரகுராம்

Published

on

சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறியதில் இருந்தே அதன் நிர்வாகிகள் மீதும், முக்கியமாக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை காயத்ரி ரகுராம் வைத்து வருகிறார். சமீபத்தில் பாஜகவில் இருந்து பல நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது பற்றியும் அவர் கமெண்ட் செய்து இருந்தார்.

இந்த நிலையில்தான் பாஜக சார்பாக தமிழ்நாட்டில் 10 புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டதை காயத்ரி விமர்சனம் செய்துள்ளார். அதில்,

10 மாவட்டங்களில் பாஜக கட்டிடங்கள்.

தமிழக பாஜகவுக்கு நிச்சயமாக உள்கட்டமைப்பில் (கட்டிடம் மட்டும்) வளர்ச்சி. ஆனால், அண்ணாமலை தலைமையில் உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள்.

மதுரை எய்ம்ஸ் கட்டிடத்திற்கும் அதே முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன், கூடிய விரைவில் கட்டப்படும் என நம்புகிறேன்., என்று கூறியுள்ளார்.

இதற்கு நெட்டிசன் ஒருவர், ஏம்மா ?
நீதான் கட்சிய பாடு பட்டு வளத்த மாதிரி பந்தா பண்றியே நீ டைரக்ட் பண்ணிருக்ர படமே ஒன்னால ஒழுங்கா பண்ணத்தெரியல ? நம்மள விட புத்திசாலிங்க கிட்ட பேசி மாட்டிக்காத இது நான் உங்ப்பாவோட ஒண்ணா வளந்த உன் சித்தபாங்கற முறையில சொல்றேன் , என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள காயத்ரி ரகுராம், ஐயோ uncle நான் கட்சியை வளர்க்கவில்லை. என்னால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியாது. முதலில் கட்சி நமக்குள் வளர வேண்டும் ஆனால் அது என்னைப் பொருத்தவரை வளரத் தவறிவிட்டது. அதனால் தான் கட்சியை விட்டு வெளியேறினேன். நான் நல்ல இயக்குனராகவும் இல்லை, நான் பந்தா செய்ய பெரிய பிரபலம் இல்லை. நான் என் தந்தையைப் போல ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நல்ல உள்ளம் என்னிடம் உள்ளது. அதே வழியில் நான் மக்களுக்கு உதவி செய்து பாதுகாத்தால் .. இது நான் நிறைவேற்றினால் அது எனக்கு மிகப்பெரிய சாதனை. I’m no one but I will be voice of many. அது அப்பா மீதான வாக்குறுதி. தயவு செய்து யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் uncle., என்று குறிப்பிட்டு உள்ளார்.

Trending

Exit mobile version