சினிமா செய்திகள்

உங்கள் படத்தில் ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள்: கார்த்திக் சுப்புராஜை கிண்டல் செய்த நடிகை காயத்ரி!

Published

on

உங்கள் படங்களில் ரவுடிகள் மட்டுமே ஹீரோவாக இருக்கின்றார்கள், இதைவிட உங்களுக்கு வேறு என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்? என நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய அரசின் புதிய ஒளிபரப்பு சட்ட திருத்தம் விரைவில் வர இருக்கும் நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், கார்த்தி உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டத்திருத்தம் குறித்து கருத்து தெரிவிக்க நேற்று தான் கடைசி தேதி என்ற நிலையில் நேற்றைய கடைசி நாளில் தான் அனைவரும் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவின் கருத்துக்கு ஏற்கனவே பதிலடி கொடுத்த நடிகை காயத்ரி ரகுராம் தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு பதிலடி கொடுத்துள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில், ‘ஒளிபரப்பு திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது கலையுலக கருத்து சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும்’ என்று தெரிவித்திருந்த நிலையில் இதற்கு பதிலடியாக நடிகை காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது: எப்படியும் இந்த நாட்களில் எந்த திரைப்படத்திலும் கருத்து இல்லை. உங்கள் படங்களில் 4 சண்டைக் காட்சிகளும், 4 பாடல்களும், 4 சென்டிமென்ட் காட்சிகளும், 2 மாஸ் ஓப்பனிங் காட்சிகளும், ரவுடிகள் மட்டும் ஹீரோக்கள். வேறு எதுவும் இல்லை. இதில் உங்களுக்கு இன்னும் என்ன கருத்து சுதந்திரம் வேண்டும்? என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version