சினிமா செய்திகள்

கெளதம் மேனனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Published

on

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும், அதுமட்டுமின்றி விக்ரம் நடித்துவரும் ’துருவ நட்சத்திரம்’ மற்றும் யோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி அவர் ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கௌதம் மேனன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்திற்கு ’செல்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ள நிலையில் இருந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்து இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக ’96’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் வர்ஷா பொல்லம்மா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மதிமாறன் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version