Connect with us

சினிமா

’பத்துதல’ படத்தை அடுத்து கௌதம் கார்த்திக்கின் அடுத்தப் பட அப்டேட்!

Published

on

’பத்துதல’ படத்தை அடுத்து நடிகர் கௌதம் கார்த்திக், சரத்குமார் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் ஐபி கார்த்திகேயனுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸின் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. மேலும் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முன்னதாக திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் முடித்துள்ளனர்.

#image_title

பர்சா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் கூறும்போது, “முன்பே திட்டமிட்டபடி எங்கள் படக்குழு சரியான நேரத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் தனது முதல் அறிமுகப் படத்திலேயே பெரிய நட்சத்திரங்களையும் படக்குழுவையும் அற்புதமாகக் கையாண்டிருப்பதில் அவரது திறமையை நான் பாராட்டுகிறேன். கெளதம் கார்த்திக் மற்றும் சரத் குமார் ஆகியோர் இந்தப் படம் சிறப்பாக வர வேண்டும் என்று தங்கள் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுத்ததற்கு நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “’கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். படப்பிடிப்பைப் பொருத்தவரை சரியான திட்டமிடல் மற்றும் சரியாக அதை செய்து முடிப்பது எப்போதும் தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயம். ஒட்டுமொத்த படக்குழுவின் முழுமையான அர்ப்பணிப்பைக் கண்டு மீனாட்சி சுந்தரம் சாரும் நானும் மகிழ்ச்சியடைகிறோம். படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்”.

படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, பாடல்களை சினேகன் எழுதி இருக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவைக் கையாள, படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.

 

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!