சினிமா செய்திகள்
கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் வை ராஜா வை, இவன் தந்திரன், இந்திரஜித், இருட்டுஅறையில்முரட்டுகுத்து, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் சிம்புவுடன் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ஆனந்தம் விளையாடும் வீடு’
நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சிந்துகுமார் என்பவர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது
இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் கயிறு இழுக்கும் போட்டி போன்ற ஸ்டைலில் ஒரு பக்கம் ஆண்களும் ஒருபக்கம் பெண்களும் இழுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Happy to reveal 1st look & title of @Gautham_Karthik 'Anandham Vilayadum Veedu' produced by Sri Vari Films P. Ranga Nathan directed by @NandaPeriyasamy sir. @srivaarifilm @directorcheran @Music_Siddhu @ShivathmikaR @balabharani @SnehanMNM @soundar4uall @DoneChannel1 @digitallynow pic.twitter.com/4ws8isgwnK
— RJ Balaji (@RJ_Balaji) March 1, 2021