சினிமா செய்திகள்

பிரபல நடிகையை காதலிக்கும் கவுதம் கார்த்திக்: காதலர் தினத்தில் அறிவிப்பு?

Published

on

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகரும் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனுமான கவுதம் கார்த்திக் பிரபல நடிகை ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் காதலர் தினத்தில் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவுதம் கார்த்திக் அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த தேவராட்டம் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த மஞ்சிமா மோகனுடன் காதல் ஏற்பட்டதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையிலும் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தற்போது இரு தரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பதாகவும் தங்களுடைய காதல் மற்றும் திருமண அறிவிப்பை வரும் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் இந்த நட்சத்திர காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version