கிரிக்கெட்

சிஎஸ்கே அணிக்கு தோனி தேவையில்லையா? கவுதம் காம்பீரின் தேர்வு!

Published

on

சிஎஸ்கே அணியில் எந்த 4 வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என கவுதம் காம்பீர் தனது கருத்தை கூறியிருக்கும் நிலையில் அந்த தேர்வில் தோனி பெயர் இல்லாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகள் புதிதாக இணைய இருப்பதால் அனைத்து அணிகளுக்கும் வரும் டிசம்பர் மாதம் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் ஏற்கனவே தாங்கள் வைத்திருக்கும் வீரர்களில் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான பட்டியலை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனி, ஜடேஜா, ருத்ராஜ் மற்றும் மொயின் அலி ஆகிய நால்வரை தக்க வைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கவுதம் காம்பீர் சென்னை அணியில் நான்கு பேரை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் அவர்கள் ருத்ராஜ், ஜடேஜா, டுப்லஸ்ஸிஸ் மற்றும் சாம் கரண் ஆகிய நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மற்றவர்களை ஏலத்தில் தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலில் தோனியின் பெயர் இல்லாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி இல்லை என ரசிகர்களும் கவுதம் காம்பீருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை அணியின் உரிமையாளரே தோனியை கண்டிப்பாக தக்க வைத்துக் கொள்வோம் என்று கூறியிருக்கும் நிலையில் கவுதம் கம்பீர் வேண்டுமென்றே தோனியின் மேலுள்ள பொறாமை காரணமாக இவ்வாறு கூறியிருக்கிறார் என நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version