இந்தியா

குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை: புத்தாண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Published

on

கடந்த ஆண்டு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலையும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டது என்பதும் இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிந்ததே.

ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி கேஸ் சிலிண்டரின் விலை மாற்றப்பட்டு வரும் நிலையில் இன்று கேஸ் சிலிண்டரின் விலை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 915.50 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 2,234.50 ரூபாயிலிருந்து 2,132 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் வர்த்த பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.102.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து வணிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேபோல் அதேபோல் டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.102.50 குறைக்கப்பட்டு 1998.50 ரூபாயாக விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்பட இந்தியா முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலையை கடந்த மூன்று மாதங்களாக குறைக்கப்படாமலும் உயர்த்தப்படாமலும் ஒரே விலையில் விற்பனை ஆகி வரும் நிலையில் இந்த மாதமும் அதே நிலை தொடர்கிறது என்பது குறிபிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 100 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதால் வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version