தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

Published

on

தொடர்ச்சியாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுக் கொண்டே உள்ளன.

இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாய் ஆக இருந்த கேஸ் சிலிண்டரின் விலை அடுத்து 660 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டு தற்போது 710 ரூபாய் ஆக உள்ளது. இந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஐந்து முறை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பதவி செய்யும் போது குறைவான விலை என்றாலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் போது என்ன விலையோ அதற்கேற்பவே விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மே மாதம் 599.50 ரூபாய் ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து ஜூன் மாதத்தில் 606.50 ரூபாய்க்கும் ஜூலை மாதம் 610.50 ரூபாய்க்கும் டிசம்பர் முதல் வாரத்தில் 660 ரூபாய்க்கும் டிசம்பர் 15-ம் தேதி 710 ரூபாய்க்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version