கிரிக்கெட்

அடுதடுத்து வீரர்கள் விலகுவதால் ஐபிஎல் தொடர்ந்து நடைபெறுமா? நிறுத்தப்படுமா?

Published

on

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்கள் அடுத்தடுத்து விலகி வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா? நிறுத்தப்படுமா? என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் சமீபத்தில் ஆரம்பித்து தற்போது 20 க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் வீரர்கள் பல்வேறு காரணங்களால் வீரர்கள் போட்டியில் இருந்து விலகி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஹாசில்வுட் சமீபத்தில் விலகினார். இதனை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த லிவிங்ஸ்டன் விலகினார். மேலும் ராஜஸ்தான் அணியில் விளையாடிய பென்ஸ்டோக்ஸ் காயம் காரணமாக நாடு திரும்பினார்.

அதேபோல் பெங்களூர் அணியில் விளையாடி கொண்டிருந்த ஆடம் ஜாம்பா மற்றும் ரிச்சர்ட்சன் ஆகிய இருவரும் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் நாடு திரும்புவதாக அறிவித்தனர். மேலும் டெல்லி அணியின் தமிழக வீரர் அஸ்வின் தனது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருப்பதால் விலகுவதாக அறிவித்தார். அதேபோல் ஐதராபாத் அணியை சேர்ந்த நடராஜன் காயம் காரணமாக விலகினார்.

இந்த நிலையில் அடுத்தடுத்து வீரர்கள் விலகி கொண்டிருப்பதால் ஐபிஎல் போட்டி தொடர்ந்து நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி ’திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும் அதே நேரத்தில் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவது கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். வீரர்கள் குடும்பம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலக விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறோம்’ என்றும் இரங்கலை தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version