கிரிக்கெட்

மகாராஷ்டிராவில் ஊரடங்கு: ஐபிஎல் போட்டிகளுக்கு சிக்கலா? கங்குலி விளக்கம்!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும், சனி ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பாக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அதிக போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கை மீறி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்துவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதியளித்துள்ளார். மேலும் வீரர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கொரோனா குறித்த அச்சம் யாருக்கும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் போட்டிகள் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்றும் அந்த மைதானத்தில் பணிபுரிந்த 10 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் குணமாகி வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடைபெற உள்ளது என்பதும், முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending

Exit mobile version