இந்தியா

எம்பி ஆகிறார் சவுரவ் கங்குலி: அடுத்த பிசிசிஐ தலைவர் யார்?

Published

on

பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி ராஜ்யசபா எம்பி ஆகப் போவதாகவும் இதனால் பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிசிசிஐ தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சவுரவ் கங்குலி அல்லது அவரது மனைவிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை கொடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவுரவ் கங்குலி வீட்டுக்குச் சென்று இரவு உணவு அருந்தினார். அப்போது ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

கங்குலிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தால் அவர் பிசிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவரது மனைவிக்கு கொடுத்தால் பிசிசிஐ தலைவராக சவுரவ் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version