சினிமா செய்திகள்

பாலிவுட்டில் தயாராகும் கங்குலி பயோபிக்… கங்குலியாக நடிக்கும் ரன்பீர் கபூர்..?

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது.

சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு குறித்த பயோபிக் படத்தில் கங்குலியாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட யோசனைக்குப் பின் கங்குலி தனது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். சமீபத்தில் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பயோபிக் குறித்துப் பகிர்ந்துள்ளார் கங்குலி.

மேலும், ரன்பீர் கபூர் கங்குலியாக நடித்தால் நன்றாக இருக்கும் என கங்குலியே பரிந்துரை செய்துள்ளாராம். ஆனால், ரன்பீர் தவிர்த்து மேலும் இரண்டு முக்கிய நடிகர்கள் இயக்குநரின் பட்டியலில் உள்ளனராம். இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் ஆகியன உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களை தற்போது வெளியிட விரும்பவில்லை என அந்த நேர்காணலில் கங்குலி தெரிவித்துள்ளார்.

கங்குலி பயோபிக்-ல் பிசிசிஐ தலைவர் ஆவது வரையிலான காலகட்டங்கள் இடம் பெறும் எனக் கூறப்படுகிறது. அசாருதின், சச்சின், தோனி ஆகிய கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் கங்குலியும் இணைய உள்ளார். பாலிவுட்டில் கிரிக்கெட் பயோபிக்குகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியுள்ளன.

இதேபோல், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராக் பயோபிக்-ல் நடிகை டாப்சி நடித்து வருகிறார். இதேபோல், விரைவில் மற்றொரு கிரிக்கெட் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமி பயோபிக்கும் நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாக உள்ளது.

Trending

Exit mobile version