விமர்சனம்

பில்லா படத்தை பட்டி டிங்கரிங் பார்த்தால்.. கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ரெடி?

Published

on

தயாரிப்பாளர் சி.வி. குமார், மாயவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், புது முயற்சியாகவே அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் அடுத்ததாக இயக்கியுள்ள கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படம் இன்று வெளியாகியுள்ளது.

தனது காதல் கணவனை போலி என்கவுண்டர் செய்யும் போலீஸ்காரர்களையும் அதற்கு உடந்தையாக இருக்கும் போதை மாஃபியா கும்பலையும் காதலனை இழந்த பெண் எப்படி பழிவாங்குகிறாள் என்பதே கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்தின் கதை.

நாயகி பிரியங்கா ரூத், அப்பாவி பெண்ணாகவும், அதிரடி நாயகியாகவும் அசத்தியுள்ளார்.

வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா படங்களில் வில்லனாக நடித்துள்ள டேனியல் பாலாஜி, இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

ஒரு பெண்ணின் மீது கொண்ட காம பசி, ஒரு போதை மாஃபியா கூட்டத்தையே எப்படி கூண்டோடு அழிக்கிறது என்பதை திரைமொழியில் இயக்குநர் சி.வி. குமார் அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார்.

வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன் என படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்களும் ஒரு கேங் த்ரில்லர் படத்துக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளனர்.

புதுமுக நாயகி பிரியங்கா ரூத், சில இடங்களில் பெர்ஃபார்ம் பண்ணவில்லையோ அல்லது அவ்வளவுதான் அவரது நடிப்பா என்ற சந்தேகத்தையும் வரவழைக்கிறது.

பில்லா படத்தில் ஸ்ரீபிரியாவின் அண்ணனை பில்லா ரஜினி கொன்று விட்டதற்கு பழி வாங்க ஒரு கராத்தே மாஸ்டரிடம் பயிற்சி எடுத்து வந்து பழி வாங்க துடித்து பின்னர் உண்மையான பில்லா இறந்து விட்டார். இவர் பில்லா இல்லை என்பதை அறிந்து நாயகி ஆகிவிடுவார்.

அந்த ஸ்ரீபிரியா கதாபாத்திரம் பில்லா குரூப்பை அழித்து இருந்தால், அதுதான் கேங் ஆஃப் மெட்ராஸ் கதை.

ஆனால், அதே கதையை ரீமேக் செய்து எடுத்த அஜித்தின் பில்லா படம் ஓடவில்லையா?

எல்லா தமிழ் சினிமாவிலும் கதை பஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ரசிகர்களுக்கு ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்‌ஷன் த்ரில்லரை கொடுத்த விதத்தில் இயக்குநர் பாஸாகி விட்டார்.

சினி ரேட்டிங்: 2.75/5.

seithichurul

Trending

Exit mobile version