சினிமா

குயின் பட இயக்குநர் மீது கங்கனா பாலியல் புகார்

Published

on

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரனாவத், குயின் படத்திற்காக தேசிய விருது வென்றார். இந்நிலையில், அப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் பல பெண்கள் வாழ்க்கையை சீரழித்துள்ளார்.

நான் கொஞ்சம் கடுமையானவர் என்பதால் என்னிடம் நெருங்கமாட்டார், ஆனால், நட்பாக என்னை கட்டிப்பிடிக்கும் போது கூட மிக இறுக்கமாக தான் பிடிப்பார்.

அவர் மேல் புகார் கொடுத்த ஒரு பெண்ணிற்கு நான் ஆதரவு தந்ததால், அவர் இயக்கவிருந்த ஒரு படத்திலிருந்து கூட என்னை தூக்கினார், அது பற்றி எல்லாம் எனக்கு துளிக்கூட கவலையில்லை என கங்கனா ஓபன் டாக் விடுத்துள்ளார். பாலிவுட்டில் ஏஐபி சேனல் காமெடியன், சேத்தன் பகத் என பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவிலும், பாடகி சின்மயி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை பட்டியலிட்டு வருகிறார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, நடத்தி வரும் பெண்கள் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண்களிடம் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், டுவிட்டரில் புகார் எழுந்துள்ளது. மேலும், ராதாரவியும் இதே போன்ற பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version