சினிமா செய்திகள்

ஒரே நேரத்தில் 4 மொழிகளில் தயாராகும் படம்… ஹீரோ ஆக கணேஷ் வெங்கட்ராம்..!

Published

on

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோ ஆக ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் தயாராகும் படம் ஒன்றில் நடிக்கிறார்.

கணேஷ் வெங்கட்ராம் தமிழில் த்ரிஷா- பிரகாஷ்ராஜ் உடன் ‘அபியும் நானும்’ என்னும் படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். ஹீரோவாக எந்தப் படத்திலும் பெரிதாக ஜொலிக்காத கணேஷ் வெங்கட்ராம் துணை கதாபாத்திரங்களில் உன்னைப் போல் ஒருவன், கோ, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

அதிகப்படியாக விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் உலகின் பிரபல ஒளிப்பதிவாளர் கபில் லால் புதிதாக ஒரு படம் இயக்க உள்ளார். ஒரே நேரத்தில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மராட்டி, பெங்காலி ஆகிய நான்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் தான் நாயகன் ஆக கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பார்வதி நாயர் நடிக்கிறார்.

ரொமான்ஸ் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராம் ஒரு சைக்காலஜிஸ்ட் ஆகவும் நாயகி பார்வதி நாயர் ஒரு தொழில் அதிபர் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

Trending

Exit mobile version