சினிமா

டாப்ஸியின் கேம் ஓவரா? இல்லை ஸ்டார்ட்டா?

Published

on

பாலிவுட்டை கலக்கி வரும் டாப்ஸி புயல் மீண்டும் கோலிவுட்டை நோக்கி நகர்ந்துள்ளது. டாப்ஸி நடிக்கும் கேம் ஓவர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு.

தமிழ் சினிமாவில் நயன்தாராவின் ‘மாயா’ படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின்சரவணன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைபெற்று மெகா ஹிட்டானது. இதனையடுத்து அஸ்வின்சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம்‘இறவாக்காலம்’.

இதில் ஹீரோவாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாநடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், அஸ்வின் சரவணன் இயக்கவிருக்கும் புதிய படம்குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘கேம் ஓவர்’ எனடைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாகடாப்சி நடிக்கவிருக்கிறார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகவிருக்கிறதாம். இதனை ‘Y NOT ஸ்டுடியோஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் சென்னையில் இன்று (அக்டோபர் 11-ஆம் தேதி) முதல் துவங்கவுள்ளது.இதை ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனமே தங்களதுட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டிஉறுதிபடுத்தியதோடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும்வெளியிட்டுள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version