கிரிக்கெட்

தோனியை விளாசிய கௌதம் கம்பிர்!

Published

on

இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கௌதம் கம்பிர் முன் கோபக்காரர். இவர் இந்திய அணியின் இன்றியமையாத பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார். ஆனால் தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிகாலங்களில் அணியில் இடம்பெற முடியாமல் நேற்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கம்பிர் ஓரங்கட்டப்பட்டதற்கு முன்னாள் கேப்டன் தோனிதான் காரணம் என பலமுறை கிரிக்கெட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்ற கம்பிர் இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தோனியை கடுமையாக சாடியுள்ளார். 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் ஒன்றில் சச்சின், ஷேவாக் மற்றும் கம்பீர் ஆகியோரைச் சுழற்சி அடிப்படையில் பயன்படுத்திய தோனியின் முடிவை கடுமையாக சாடியுள்ளார்.

தொடர்ந்து ரன் எடுக்கும் திறன் இருந்தால், நீங்கள் தொடர்ந்து விளையாடலாம், வயது ஒரு விஷயமே இல்லை. அன்று எங்கள் மூவராலும் இணைந்து விளையாடமுடியவில்லை. ஆனால் ஒரு இக்கட்டான சூழலில் எங்கள் மூவரையும் ஒன்றாகக் களமிறக்கினார் தோனி. அந்த போட்டியில் சச்சின் மற்றும் சேவாக் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், நான் மூன்றாவது வீரராகவும் களமிறக்கப்பட்டேன். அதில் வெற்றியும் பெற்றோம்.

அந்த தொடரின் தொடக்கத்தில் எங்களை இணைந்து விளையாட அனுமதிக்காத தோனி ஒரு இக்கட்டான நேரத்தில் மூவரையும் களமிறக்கினார். ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாகயிருக்க வேண்டும். ஆனால், தோனியால் உறுதியாக இருக்க முடியவில்லை. தனது முடிவை அந்தத் தொடரிலே மாற்றினார் என விளாசினார் கம்பிர்.

seithichurul

Trending

Exit mobile version