இந்தியா

காஷ்மீர் விவகாரம்: அஃப்ரிடிக்கு பதிலடி கொடுத்த கௌதம் காம்பீர்!

Published

on

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் என்ற யூனியன் பிரதேசமுமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுதான் கடந்த இரண்டு தினங்களாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடி, காஷ்மீர் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உறுதியளித்தபடி அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும். சுதந்திர உரிமை என்பது அனைவருக்கும் சொந்தமானது தான். ஐக்கிய நாடுகள் சபை ஏன் உருவாக்கப்பட்டது? அது ஏன் தற்போது தூங்குகிறதா? காஷ்மீரில் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கௌதம் காம்பீர் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இவை அனைத்தும் குற்றச்செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கை. இதற்கு குரல் கொடுக்கும் அப்ஃரிடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் குற்றசெயல்கள் குறித்து பேச மறந்துள்ளார். கவலை வேண்டாம் மகனே, இவை அனைத்தும் தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version