விளையாட்டு

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் வெற்றி: சர்ச்சை வாழ்த்தால் சிக்கலில் கெளதம் கம்பீர்

Published

on

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துத் தெரிவித்த கெளதம் கம்பீர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி ஆடவர் அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இதற்கு இந்தியத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பல தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெற்ற வெற்றி என்பதால் இது மகத்தான சாதனையாகக் கருதப்பட்டு வருகிறது.

இந்திய ஹாக்கி அணியினருக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் இந்நாள் எம்.பி-யுமான கெளதம் கம்பீர் வாழ்த்துகளைத் தெரிவிக்க அது மிகப்பெரிய சர்ச்சை ஆகியுள்ளது. கெளதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், “1983, 2007 அல்லது 2011 உலகக்கோப்பை வெற்றிகளை மறப்போம். எந்தவொரு உலகக்கோப்பையை விடவும் இந்த ஹாக்கி பதக்கம் மிகப்பெரியது” எனக் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

இது மிகப்பெரிய சர்ச்சை ஆகியுள்ளது. கெளதம் கம்பீர் ஒரு விளையாட்டு வீரரைப் போல் இல்லாமல் அரசியல்வாதியாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்றும் சர்ச்சையே இல்லாமல் ஒரு வாழ்த்து கூட பதிவிட முடியாது என்றும் சமுக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறார். மேலும், இரு விளையாட்டுகளை ஒப்பிட்டுப் பேசுவதே தவறு, ஒரு விளையாட்டு வீரருக்கு இந்தப் பொறுப்பு கூட கிடையாதா என்ற வகையிலும் கம்பீர் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version