தமிழ்நாடு

நாகை, திருவாரூரை வேறு ஒரு நாளில் ஆய்வு செய்வோம்.. முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு!

Published

on

சென்னை: இன்று காலை கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலையில் சென்று பார்வையிட்டார்.

ஆனால் மழையால் முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டது. நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் சென்னை திரும்பினார் முதல்வர்.

இந்த நிலையில் இந்த பயண ரத்து குறித்தும், புயல் பாதிப்பு குறித்தும் முதல்வர் பேட்டியளித்துள்ளார். அதில், மழை காரணமாக நிறைய மரங்கள் விழுந்துள்ளது. இதுவரை 1 லட்சம் மின்சார கம்பங்கள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை திடீர் என்று அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

நிவாரண பணிகளை செய்யும் நபர்களை கிண்டல் செய்ய கூடாது. அவர்களின் பணிகளை தொல்லை செய்ய கூடாது. இது அவர்களை கொச்சைப்படுத்துவதற்கு சமம்.

புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு மழையால் செல்ல முடியவில்லை. மழை காரணமாக ஹெலிகாப்டர் செல்லவில்லை. விடுபட்ட பகுதிகளை பார்வையிட செல்ல உள்ளேன். விரைவில் வேறு ஒரு நாளில் விடுபட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்வேன்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version