தமிழ்நாடு

திடீரென்று வேகமெடுத்தது கஜா புயல்.. வானிலை மையம் அதிர்ச்சி!

Published

on

சென்னை: கஜா புயலின் வேகமும் திடீர் என்று அதிகரித்துள்ளது. தற்போது இந்த புயல் 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது .

கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது.

நேற்று மாலையில் இருந்தே குறைவான வேகத்திலேயே கஜா புயல் பயணித்தது. அதிகபட்சம் 10 கிலோ மீட்டர் வேகம் வரை எட்டியது. இன்று காலை முழுக்க 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்தது.

இந்த நிலையில் புதிய திருப்பமாக கஜா புயல் வேகம் திடீரென்று அதிகரித்துள்ளது. கஜா புயல் தற்போது 24 கிமீ வேகத்தில் நகர்கிறது. காலையில் 6 கிமீ வேகத்தில் மட்டுமே நகர்ந்தது பின் 8 கிலோ மீட்டராக அதிகரித்தது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version