தமிழ்நாடு

சென்னையை நோக்கி வரும் கஜா.. இப்போது எங்குள்ளது?

Published

on

சென்னை: கஜா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கஜா புயல் புயல் தற்போது சென்னைக்கும், நாகைக்கும் இடையில் கரையை கடக்க உள்ளது. நவம்பர் 15ம் தேதி இந்த புயல் கரையை கடக்க உள்ளது.

இந்த புயல் மொத்தம் 120-140 கிலோ மீட்டர் வேகம் வரை அடைய வாய்ப்புள்ளது. சென்னையின் இதன் காரணமாக 120 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசலாம்.

இந்த புயல் சென்னையை நோக்கித்தான் தற்போது வந்து கொண்டு இருக்கிறது. சென்னையை வழியாக கடலூர் அருகே சென்று அப்படியே கடலில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இப்போது இந்த புயல் சென்னையில் இருந்து 740 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நேற்று புயல் உருவான போது 990 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. இன்றுக்கு மாலைக்குள் புயல் சென்னையை பெருமளவில் நெருங்கிவிடும் என்கிறார்கள்.

நேற்று முழுக்க இந்த புயல் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. இன்று காலையில் இருந்து 25 கிலோ மீட்டர் வேகம் வரை எட்டியது. இன்று மாலை 30 கிலோ மீட்டர்  வேகத்தை இந்தபுயல் எட்ட வாய்ப்புள்ளது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version