தமிழ்நாடு

கஜா புயலுக்கு இடையிலும் சாட்டிலைட்.. மாஸ் காட்டும் இஸ்ரோ

Published

on

சென்னை: கஜா புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை தாக்க உள்ள நிலையில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் அனுப்ப உள்ளது.

சென்னையை நோக்கி வரும் கஜா புயல் மிகப்பெரிய மழையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரோ வரும் நவம்பர் 14ம் தேதி விண்ணில் செயற்கைக்கோளை ஏவ இருக்கிறது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ விண்ணில் ஏவ இருக்கிறது.

இதனால் ராக்கெட் விண்ணில் ஏவப்படுமா என்று சந்தேகம் வந்தது. ராக்கெட் ஏவுவதற்கு சரியான சூழ்நிலை நிலவுமா என்று கேள்விகள் எழுந்தது.

இந்த நிலையில் , திட்டமிட்டபடி இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி ஜிஎஸ்எல்வி மார்க் 3 வரும் 14ம் தேதி மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படும. இதில் எந்த மாற்றமும் இல்லை என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Trending

Exit mobile version