தமிழ்நாடு

கஜா புயலை தாக்குப்புடிக்குமா கடலூர்?: முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!

Published

on

அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள கஜா புயல் கடலூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பாதிக்கவுள்ள நிலையில் ஏற்கனவே பல இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் இந்த கஜா புயலை தாங்குமா என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய 274 பகுதிகள் கண்டறியப்பட்டு 19 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 28 புயல் பாதுகாப்பு மையங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழுவில் பயிற்சி பெற்ற 117 காவலர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 75 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

அரிசி, கோதுமை, சர்க்கரை, பால் பவுடர், 276 ஜேசிபிக்கள், 196 ஜெனரேட்டர்கள், 219 மரம் அறுக்கும் மிஷின்கள், மணல் மூட்டைகள் என பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் அனைவரும் படகுகளோடு வந்து மீட்புப் பணியில் ஈடுபட தயாராகவிருக்கிறார்கள். இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களையும் உடைமைகளையும் பாதுகாக்க அரசு அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறை, தீ அணைப்புத் துறையினர் என கூட்டாகக் களத்தில் நிற்கின்றனர். புயலை முன்னிட்டு நாளை நாகை, கடலூர் மாவட்டங்களிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் வேகம் மணிக்கு 6 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. இதனால் நாளை மாலை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version