டிவி

அலைபாயுதே ஷாலின்னு நினைப்பு!.. கேப்ரியல்லாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்…(வீடியோ)…

Published

on

நடனத்தில் ஆர்வம் உள்ள கேப்ரியல்லா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை பெற்றார். அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்தில் சிறுமியாக நடித்தார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். 100 நாட்கள் தாக்குபிடித்து திடீரென 5 லட்சம் ஆஃபரை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின் திரைப்படங்களில் எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

இதற்காக விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்வதோடு மட்டுமில்லாமல் அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என அவர் காத்திருக்கிறார்.

இந்நிலையில், அலைபாயுதே படத்தில் இடம் பெற்ற ‘பச்சை நிறமே’ பாடலில் கருமை நிறமே வரிகளுக்கு போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version