சினிமா செய்திகள்

அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்: ‘திரெளபதி இயக்குனரின் ஆவேச டுவீட்!

Published

on

‘திரெளபதி என்ற திரைப்படத்தை இயக்கி சர்ச்சைக்குள்ளான இயக்குனர் ஜி மோகன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தின் ‘திரெளபதியின் முத்தம் என்ற பாடல் இன்று வெளியாக உள்ளதாக வெளியான அறிவிப்பில் இருந்தே சமூக வலைதளங்களில் இவர் ஒரு சில கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்த டுவிட்டில் ;அக்னிக்கு ஏதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்; என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவு செய்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனை போல அவரவர் செயல்கள் அமையும்.. அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.. அக்னி தாய்க்கும் அப்படித்தான்.. யாரலும் அசுத்த படுத்த முடியாது.. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்து கொள்வாள்’ என்று கூறியுள்ளார். இயக்குனர் ஜி மோகனின் இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

Trending

Exit mobile version