உலகம்

2022-ம் நிதி ஆண்டுக்கான H-1B விசா விண்ணப்பம் தேதி அறிவிப்பு.. எப்போது முதல் என்று வரை?

Published

on

2022-ம் நிதி ஆண்டுக்கான H-1B விசா விண்ணப்பம் தேதி அறிவிப்பை வெள்ளிக்கிழமை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகம் வெளியிட்டது.

அமெரிக்காவில் பணிக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டவர்கள் H-1B விசா பெற வேண்டும். இந்தியா மற்றும் சீனாவில் உள்ள ஐடி மற்றும் தொழில் நிறுவனங்கள் H-1B விசாவை பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றன.

2022-ம் நிதி ஆண்டு அமெரிக்காவில் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளவர்கள் H-1B விசாக்கு விண்ணப்பிக்கலாம். 2021, மார்ச் 9-ம் தேதி தொடங்கி, மார்ச் 25-ம் தேதி வரை H-1B விசாக்கான விண்ணப்பங்களை அனுப்பலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பு மார்ச் 31ம் தேதி வெளியாகும்.

தேர்வு செய்யப்பட்டு வெற்றிகரமாக விசாவை பெறுபவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமெரிக்காவில் பணியில் சேர முடியும்.

உலகம் முடிவதில் இருந்தும் ஆண்டுக்கு 65,000 நபர்கள் H-1B விசாவை பெறுவார்கள். கூடுதலாக 20,000 H-1B விசா வெளிநாட்டு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்படும்.

ட்ரம்ப் கொண்டு வந்த திறன் மற்றும் ஊதிய H-1B விசா விதிமுறைகளைப் பின்பற்றாமல், தற்போது வரை பயன்படுத்தி வந்த லாட்டரி முறையே பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளனர். ட்ரம்ப் கொண்டு விதிகள் 2021 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு அமலுக்கு வர வாய்ப்புள்ளது.

Trending

Exit mobile version