உலகம்

இவர்கள் மட்டும் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்: அமெரிக்க அரசு அறிவிப்பு!

Published

on

முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்லலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் வந்துவிடும் என்பதால் கொரோனா ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க அரசு கொரோனா வைரஸ் குறித்த புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் இரண்டு டோஸ் அதாவது முழு அளவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 42 சதவிகிதத்தினர் ஒரு டோஸ் தடுப்பு ஊசியை எடுத்து உள்ளனர் என்றும் அவர்களில் 30 சதவீதம் பேர் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் அவர்கள் நண்பர்களுடன் வெளிப்புற உணவு விடுதிகளில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம் என்றும் முகக்கவசம் இல்லாமல் எங்கு வேணாலும் அவர்கள் செல்லலாம் என்றும் அவர்கள் முகக் கவசம் அணியாமல் இருந்தாலும் பாதுகாப்பு மிக்கவர்களே என்றும் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து முழு அளவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தற்போது அமெரிக்காவில் முக கவசம் இல்லாமல் வெளியே சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version