தமிழ்நாடு

முழு நேரமும் பள்ளிகள் இயங்கும்: 9,10,11 தேர்வுகள் நடத்தவும் திட்டம்: தமிழிசை ஆலோசனை

Published

on

புதுவையில் நாளை முதல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கும் என்றும் 9, 10, 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்த புதுவை துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 6 மாதங்களுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி முதல் பள்ளிகளும் கல்லூரிகளும் படிப்படியாக திறக்கப்பட்டன. ஆனாலும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே பள்ளிகள் இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முழுநேரமும் வழக்கம் போல் செயல்படும் என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். வழக்கமான பள்ளி நேரப்படி பள்ளிகள் இயங்கும் என்றும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி 9 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தேர்தலுக்குப் பின்னர் தேர்வுகள் நடத்துவது குறித்தும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசித்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 

Trending

Exit mobile version